மட்டக்களப்பு - கோட்டைக்கல்லாறு பிரதான வீதியில் நேற்று (22) இரவு இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இருவர் மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐவர் பலத்த காயமடைந்துள்ளனர்.
கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகில் நேற்றிரவு 9.20 அளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
கோட்டைக்கல்லாறு பகுதியைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் இரண்டு உந்துருளிகளில் கல்முனை வீதி வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது, இரு உந்துருளிகளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.
இதன்போது கட்டுப்பாட்டை இழந்த அவற்றில் ஒரு உந்துருளி, வீதியைக் கடப்பதற்காகக் காத்திருந்த மூன்று மாணவர்கள் மீது மோதியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்த 7 பேர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், 18 வயதான மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 17 வயதுடைய மாணவர் ஒருவரும் இன்று (23) காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
மேலதிக வகுப்பை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோதே குறித்த மாணவர்கள் இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.
காயமடைந்த மேலும் இரண்டு சிறுவர்களும் மூன்று சிறுமிகளும் தற்போதும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், விபத்து தொடர்பில் மட்டக்களப்புக் காவல்துறையினர் மேலதிக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest News
‘Diamond Excellence விருதுகள் 2026 - ஹிரு ஊடகப் வலையமைப்புக்கு பல விருதுகள்!
Local
23 August 2026
முதல் நாளில் 300 ஓட்டங்களை குவித்தது இந்தியா - 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியது இலங்கை
Local
23 August 2026
முச்சக்கர வண்டி ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த பரிசீலனை!
Local
23 August 2026
இலங்கை சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்!
Local
23 August 2026
மட்டக்களப்பில் உந்துருளி விபத்து: இரு மாணவர்கள் பலி - மேலும் 5 பேர் காயம்!
Local
23 August 2026
ஹக்கலையில் பேருந்து மோதியதில் ஒருவர் பலி!
Local
23 August 2026
நாடு முழுவதும் வறட்சி உக்கிரம்: விவசாயம் பாதிப்பு - 72,000க்கும் மேற்பட்டோருக்குப் குடிநீர் விநியோகம்!
Local
23 August 2026
பொரளையில் வீடொன்றுக்கு முன்பாக கைக்குண்டு மீட்பு!
Local
23 August 2026
8 வருட இரகசிய சேமிப்பு - ஒரே இரவில் எலியால் நேர்ந்த விபரீதம்
Local
23 August 2026
பங்களாதேஷை வீழ்த்தி ஒரு இன்னிங்சாலும் 51 ஓட்டங்களாலும் அவுஸ்திரேலிய அணி வெற்றி
Local
23 August 2026