General24 August 2026

தனியார் துறை ஊழியர்களுக்கான இணையவழி தொடருந்து பருவச்சீட்டு முறைமை அறிமுகம்

தனியார் துறை ஊழியர்கள் இணையவழி (Online) மூலமாக தொடருந்து பருவச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்கான புதிய நடைமுறை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அரசப் பணியாளர்களுக்காக அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட இணையவழி முறைமையைத் தொடர்ந்து, இந்த வசதி தனியார் துறை ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

பல தசாப்தங்களாக மாற்றமின்றி காணப்பட்ட சிக்கலான நடைமுறைகளுக்குப் பதிலாக இந்தப் புதிய திட்டம் கொண்டுவரப்படுகிறது.

முன்னதாக பருவச்சீட்டைப் பெறுவதற்குப் பயணிகள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டியிருந்ததோடு, தமது பணித்தளங்களில் இருந்து கடிதங்களையும் பெற வேண்டியிருந்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
Related recommendation
Hiru TV News | Programmes