அவிசாவளையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, போலியான இலங்கைத் தரச் சான்றிதழ் (SLS) முத்திரையிடப்பட்ட சுமார் 8,500 குடிநீர் போத்தல்களை நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) கைப்பற்றியுள்ளது.
முதற்கட்ட விசாரணைகளின்படி, குறித்த குடிநீர் அமித்திரிகல–ருவன்வெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் உற்பத்தி செய்யப்பட்டு, விநியோகத்திற்காக அவிசாவளை பகுதியில் உள்ள களஞ்சியசாலையொன்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட பொருட்களில் 500 மில்லிலிற்றர் முதல் 19 லிற்றர் வரையிலான பல்வேறு அளவிலான குடிநீர் கொள்கலன்கள் இருந்துள்ளன.
அவற்றில் போலியான SLS சான்றிதழ் குறியீடும், 894 என்ற சான்றிதழ் இலக்கமும் குறிப்பிடப்பட்டிருந்ததாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த குடிநீர் போத்தல்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதற்கு முன்னரே அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், சம்பவத்துடன் தொடர்புடையவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மேலும், பொருட்களை கொள்வனவு செய்யும் போது மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், நுகர்வோர் சான்றிதழ் குறியீடுகள் மற்றும் பொருட்களின் தகவல்களை கவனமாக சரிபார்க்குமாறும், சந்தேகத்திற்கிடமான பொருட்கள் தொடர்பில் 1977 என்ற நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.
Latest News
களுத்துறை – பயாகலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு!
Local
31 August 2026
பயாகல - கொஸ்ஹேன பகுதியில் துப்பாக்கிச் சூடு!
Local
31 August 2026
ஆர்ஜென்டினா அணியின் தலைவர் லியோனல் மெஸ்ஸி தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்
Local
31 August 2026
கொழும்பு துறைமுகத்தில் 463 கிலோ 'ஐஸ்' போதைப்பொருள் மீட்பு: இரண்டு பாகிஸ்தானியர்கள் உட்பட மூவர் கைது!
Local
31 August 2026
10 பில்லியன் டொலரைத் தாண்டிய இலங்கையின் ஏற்றுமதி வருமானம்!
Local
31 August 2026
22 ஆவது திருத்தச்சட்டமூலம் அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறுகிறது : அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக மக்கள் திரள வேண்டும் - சஜித்!
Local
31 August 2026
அஜித்தின் ‘டேர் டெவில்’ படத்தில் ஷாலினி நடிக்கிறாரா? வெளியான புதிய தகவல்!
Local
31 August 2026
என் மகன் தீவிரவாதி அல்ல" - நடிகர் யாஷின் தாயார் புஷ்பா ஆதங்கம்
Local
31 August 2026
சுடுபடைக்கலன்கள் வைத்திருப்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!
Local
31 August 2026
தேசியப் பட்டியல் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் – ரவூப் ஹக்கீம் விளக்கம்!
Local
31 August 2026