காணாமல் போனதாகக் கூறப்பட்ட, பதுளை போதனா மருத்துவமனையைச் சேர்ந்த விசேட மருத்துவ நிபுணர் உடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மஹியங்கனை காவல்துறை தெரிவித்துள்ளது.
மஹியங்கனை, மாபாகட 17ஆம் கட்டைப் பகுதியில் உள்ள வியானா கால்வாய்க்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட உந்துருளி தொடர்பில் காவல்துறைக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
குறித்த உந்துருளி நேற்று (23) இரவு முதல் அங்கு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அது காணாமல் போனதாகக் கூறப்பட்ட மருத்துவருக்குச் சொந்தமானது என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினரும் பிரதேசவாசிகளும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே உடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதியில் இருந்து மருத்துவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், உடலத்திற்கு அருகில் சில மருந்து மாத்திரைகளும் கண்டெடுக்கப்பட்டதாகக் காவல்துறை குறிப்பிட்டது.
சம்பவம் தொடர்பில் மஹியங்கனைக் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Latest News
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பங்குகள் கேட்டு தோனி நிபந்தனை? - தொடரும் பேச்சுவார்த்தை!
Local
26 August 2026
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை!
Local
26 August 2026
விஜய்யின் 100 நாள் ஆட்சி குறித்து கேள்வியெழுப்பிய செய்தியாளர்கள்: ரஜினிகாந்தின் பதில் ?
Local
26 August 2026
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் மகன் மீது உயிர் அச்சுறுத்தல்: அமெரிக்க ரகசியப் பாதுகாப்புப் பிரிவு விசாரணை!
Local
26 August 2026
ஓமானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கிய ஈரான்!
Local
26 August 2026
$95 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மன்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்தார் பிரைட்டன் வீரர் கார்லோஸ் பலேபா!
Local
26 August 2026
உசேன் போல்ட்டின் சாதனையை முறியடித்த சீனாவின் 'தியாங்கோங் அல்ட்ரா' ரோபோ!
Local
26 August 2026
அமெரிக்கா - கனடா வர்த்தகப் போர்: கனடாவின் பதிலடித் தீர்வைகள்
Local
26 August 2026
ஃபிஃபா தலைவர் கியானி இன்பான்டினோ பதவிக்கு ஏற்பட்டுள்ள சவால்கள்
Local
26 August 2026
அமெரிக்க உளவுத் தலைவர் ஜோன் ராட்கிளிஃப் மொஸ்கோவுக்கு திடீர் பயணம்
Local
26 August 2026