ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாயார் உயிரிழந்த சம்பவத்திற்கு உதவியதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் நேற்று (23) கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேகநபர் தங்காலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, மித்தெனிய காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மித்தெனிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞராவார்.
இதேவேளை, இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபர் "ஐஸ்" போதைப்பொருளுடன் கடந்த 19ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரிடம் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளின் போதே, ‘பெக்கோ சமன்’ தாயார் உயிரிழந்த சம்பவத்துடன் அவருக்குத் தொடர்பிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் மித்தெனிய காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட அவர், வலஸ்முல்ல நீதவான் முன்னிலையில் நேற்று பிரசன்னப்படுத்தப்பட்டார்.
அவரை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Latest News
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பங்குகள் கேட்டு தோனி நிபந்தனை? - தொடரும் பேச்சுவார்த்தை!
Local
26 August 2026
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை!
Local
26 August 2026
விஜய்யின் 100 நாள் ஆட்சி குறித்து கேள்வியெழுப்பிய செய்தியாளர்கள்: ரஜினிகாந்தின் பதில் ?
Local
26 August 2026
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் மகன் மீது உயிர் அச்சுறுத்தல்: அமெரிக்க ரகசியப் பாதுகாப்புப் பிரிவு விசாரணை!
Local
26 August 2026
ஓமானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கிய ஈரான்!
Local
26 August 2026
$95 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மன்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்தார் பிரைட்டன் வீரர் கார்லோஸ் பலேபா!
Local
26 August 2026
உசேன் போல்ட்டின் சாதனையை முறியடித்த சீனாவின் 'தியாங்கோங் அல்ட்ரா' ரோபோ!
Local
26 August 2026
அமெரிக்கா - கனடா வர்த்தகப் போர்: கனடாவின் பதிலடித் தீர்வைகள்
Local
26 August 2026
ஃபிஃபா தலைவர் கியானி இன்பான்டினோ பதவிக்கு ஏற்பட்டுள்ள சவால்கள்
Local
26 August 2026
அமெரிக்க உளவுத் தலைவர் ஜோன் ராட்கிளிஃப் மொஸ்கோவுக்கு திடீர் பயணம்
Local
26 August 2026