General25 August 2026

நாட்டின் பல பாகங்களுக்கு அம்பர்: நிற வெப்ப வானிலை எச்சரிக்கை!

நாட்டின் சில பகுதிகளில் இன்று வெப்பமான வானிலை அதிகரிக்கக்கூடும் என இயற்கை இடர் முன்னெச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது.

இதன்படி இன்றைய தினம் அம்பர் என்ற செம்மஞ்சள் மட்டத்திலான எச்சரிக்கையை இயற்கை இடர் முன்னெச்சரிக்கை மையம் விடுத்துள்ளது.

நேற்று மாலை 4:00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு சில இடங்களில் எச்சரிக்கை மட்டம் வரை உயரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அதிக வெப்பம் நிலவும் நேரங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

போதிய அளவு நீர் அருந்துதல். கடினமான வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளுதல். நேரடிச் சூரிய ஒளியில் நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்த்தல் உட்பட்ட செயற்பாடுகளில் சிறப்பு கவனம் செலுத்துமாறு அதிகாரிகள் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes