General25 August 2026

நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி : இலங்கையில் சட்டென குறைந்த தங்க விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (25) சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று (24) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 386,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை 2000 ரூபாயால் குறைந்துள்ளது.

அதன்படி, இன்றைய தங்க விலை நிலவரப்படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 384,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 353,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராம் 48,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராம் 44,163 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes