வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பின்னர் அவர்கள் சட்டவிரோதமான முறையில் ஈட்டிய சொத்துக்களை அரசுடைமையாக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்த, காவல்துறை பேச்சாளர் எஃப்.யு.வுட்லர், இன்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட பஸ் லலித் என்பவரும் பாரிய போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர் என்பதால் அவரின் சொத்துகள் தொடர்பில் முன்னதாக, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதனிடையே, கடந்த 2024 ஆம் ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்ட 1,549 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கம், ஆபரணங்கள், பணம், வாகனங்கள், சொகுசு வீடுகள் மற்றும் காணிகள் போன்ற சட்டவிரோத சொத்துக்களை அரசுடைமையாக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டிலும் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன், 2026 ஆம் ஆண்டின் கடந்த சில மாதங்களில் 839 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் வாயிலாக மொத்தம் 3,878 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை அரசுடைமையாக்கத் தேவையான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்குப் பின்னர் அவை முழுமையாக அரசுடைமையாக்கப்படவுள்ளன.
இதனிடையே, கடந்த 2025 அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நாடளாவிய விசேட நடவடிக்கையின்கீழ் சோதனைகள் மற்றும் கைது நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் எவரேனும் சட்டவிரோதச் செயல்கள் குறித்த தகவல்களை வழங்க விரும்பினால், 1818 என்ற பிரத்தியேகத் தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொண்டு தகவல்களைத் தெரிவிக்கலாம். பெறப்படும் தகவல்கள் மிகவும் பாதுகாப்பாகக் கையாளப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் காவல்துறை உறுதியளித்துள்ளது.
எவரும் சட்டவிரோத வழிகளில் தமது சொகுசு வாழ்க்கைக்காக எத்தகைய சொத்துக்களையும் அனுபவிக்க முடியாது எனவும், வெளிநாடுகளில் தப்பியோடி வாழும் அனைத்து சந்தேகநபர்களையும் குற்றவாளிகளையும் தொடர்ந்தும் நாட்டுக்கு அழைத்து வருவதற்குத் தேவையான அனைத்துத் திட்டங்களும் உறுதியாகச் செயற்படுத்தப்படும் எனவும் காவல்துறை பேச்சாளர் எஃப்.யூ.வுட்லர் தெரிவித்தார்.

Latest News
அமெரிக்கா - கனடா வர்த்தகப் போர்: கனடாவின் பதிலடித் தீர்வைகள்
Local
26 August 2026
ஃபிஃபா தலைவர் கியானி இன்பான்டினோ பதவிக்கு ஏற்பட்டுள்ள சவால்கள்
Local
26 August 2026
அமெரிக்க உளவுத் தலைவர் ஜோன் ராட்கிளிஃப் மொஸ்கோவுக்கு திடீர் பயணம்
Local
26 August 2026
நாட்டுப்புற இசை ஆவணம் டொலி பார்டன் காலமானார்
Local
26 August 2026
ஐக்கிய நாடுகளின் ஏதிலிகள் அமைப்பின் மீது இஸ்ரேலியப் படைகள் அதிரடித் தாக்குதல்!
Local
26 August 2026
தமிழக மக்களின் அரசியல் முடிவு சரியானது - முதலமைச்சர் விஜய் குறித்து நடிகர் யாஷ் புகழாரம்!
Local
25 August 2026
அம்பலாங்கொடவில் அதிரவைக்கும் சம்பவம்: விடுதியில் தங்கியிருந்த நபர் மர்மமான நிலையில் உடலமாக மீட்பு!
Local
25 August 2026
எல் நினோ தீவிரமடைந்தால் இலங்கையில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
Local
25 August 2026
திடீரென உருவான சூப்பர்செல் சூறாவளி: பிரான்ஸில் நிலவும் பதற்றமான சூழல்!
Local
25 August 2026
முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கான குறைந்தபட்ச வயது 40 ஆக அதிகரிக்கப்படுமா? – அரசாங்கம் தெளிவுபடுத்தல்!
Local
25 August 2026