General25 August 2026

துபாயில் இருந்து அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’: பல பகுதிகளில் மக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டம்

துபாயில் கைது செய்யப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும், ‘பஸ் லலித்’ என்றழைக்கப்படும் லலித் கன்னங்கர இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், ஹங்வெல்ல, வட்டரெக்க, மீகொட மற்றும் கலகெதர உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதனை முன்னிட்டு, குறித்த பகுதிகளில் பல்வேறு பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த நடவடிக்கைகளை முன்னெடுத்த அரசாங்கத்துக்கும் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

அத்துடன், ‘பஸ் லலித்’ என அழைக்கப்படும் லலித் கன்னங்கர, யாசகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து இலட்சக்கணக்கான பணத்தைப் பெற்றதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes