General25 August 2026

புறக்கோட்டையில் வெற்றிலை துப்பினால் இனி சுத்தம் செய்யணும்! 1,029 பேருக்கு பாடம் புகட்டிய வான்படை

புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் வெற்றிலை துப்புதல் மற்றும் சிறுநீர் கழித்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 1,029 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை வான்படையின் ஊடகப் பேச்சாளர் குரூப் கெப்டன் நலின் வேவக்கும்புர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வினவியபோது, அடையாளம் காணப்பட்டவர்கள் அந்த இடங்களை சுத்தம் செய்யும் சமூக சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

வெற்றிலை துப்புதல் மற்றும் சிறுநீர் கழித்தல் போன்ற செயல்களில் சில பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களும் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இலங்கை வான்படையினரால் புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் புதிய சிசிடிவி (CCTV) கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் காரணமாகவே இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுபவர்களை எளிதில் அடையாளம் காண முடிந்துள்ளதாக வான்படை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes