பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்த திட்டமிட்ட குற்றக்கும்பல் உறுப்பினரான கெஹெல்பத்தர பத்மே எனப்படும் கோரளகமகே மன்தினு பத்மசிறி பெரேரா என்பவரை எதிர்வரும் செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31ஆம் திகதி இந்தோனேசியாவிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தின் ஊடாக நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட இவர், தொடர்ச்சியாகத் தடுப்பு காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில், தடுப்புக் காவல் காலம் நிறைவடைந்ததை அடுத்து இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
பலத்த பாதுகாப்புடன் சந்தேகநபர் நீதிமன்றில் இன்று பிரசன்னப்படுத்தப்பட்டபோது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கையை அடுத்தே கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இதனிடையே, கணேமுல்ல சஞ்சீவ படுகொலைச் சம்பவத்துடனும் தொடர்புடைய இந்தச் சந்தேகநபர், அந்தக் கொலை வழக்கின் 18ஆவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதாகக் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளது.
அத்துடன், அந்த வழக்கு மீண்டும் அழைக்கப்படும் எதிர்வரும் 4ஆம் திகதியன்று சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Latest News
22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக உயர் நீதிமன்றில் மேலும் இரண்டு மனுக்கள் தாக்கல்!
Local
28 August 2026
உயிரைக் காக்கும் அதிநவீன தொழில்நுட்பம்: கரப்பான் பூச்சிகளின் உடலில் மருத்துவ உபகரணங்கள் – விஞ்ஞானிகளின் வியக்க வைக்கும் முயற்சி!
Local
28 August 2026
நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் காலமானார்
Local
28 August 2026
கொழும்பில் அதிகரிக்கும் எலித் தொல்லை – மக்கள் அச்சம்
Local
28 August 2026
கையடக்கத் தொலைபேசி வெடித்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
Local
28 August 2026
நேபாளத்திற்கு 3.6 மில்லியன் அமெரிக்க டொலர் அவசரகால நிவாரணம் அறிவிப்பு - அவுஸ்திரேலியா தீர்மானம்
Local
28 August 2026
நேபாள பேரிடர்: தொடர்ந்து கைகொடுக்கும் இந்தியா – இரண்டாம் கட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு!
Local
28 August 2026
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு எதிர்வரும் மாதம் இலங்கைக்கு விஜயம்
Local
28 August 2026
நவோதயபுரம் வீட்டுத்திட்டம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு
Local
28 August 2026
தக்காளிக் குளியலில் திளைத்த ஸ்பெயின் - கோலாகலமாக நடைபெற்ற 'லா டொமாட்டினா' திருவிழா
Local
28 August 2026