முச்சக்கர வண்டிகளை ஓட்டுநர்களுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக அதிகரிப்பது தொடர்பான எந்தவொரு முன்மொழிவையும் அரசாங்கம் இதுவரை பரிசீலிக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாடசாலைக் கல்வியை இடைநடுவில் கைவிட்டவர்கள் அல்லது கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய பின்னர் மேலதிக கல்வியைத் தொடராதவர்களுக்கு தொழிற்கல்வி மற்றும் பயிற்சிகளை வழங்குவது தொடர்பில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து பல்வேறு முன்மொழிவுகள் கிடைத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அவற்றில் சில முன்மொழிவுகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், ஏனைய முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெளிவுபடுத்தினார்.
குறிப்பிட்ட வயது வரம்பை நிர்ணயிப்பது தொடர்பிலும் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் உரிய பரிசீலனைகளை மேற்கொண்டதன் பின்னர், நடைமுறைப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
Latest News
இந்தியாவில் மோடியின் செல்வாக்கு குறையவில்லை : பிரதமர் போட்டிக்களத்தின் முதல் மூன்று பேரில் விஜய்யும் உள்ளடக்கம்
Local
28 August 2026
பெண்கள், குழந்தைகளின் ஆபாச படங்களை பகிர்ந்தவர் கைது !
Local
28 August 2026
முன்னாள் ஆண் கிரிக்கெட் வீரர், அவுஸ்திரேலிய பெண்களுக்கான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க அனுமதி!
Local
28 August 2026
இன்றும் எச்சரிக்கை நிலைக்கு செல்லும் வெப்பநிலை!
Local
28 August 2026
22 தொடர்பில் மீண்டும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
Local
28 August 2026
நேபாளம், திபெத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால், உயிர்த் தப்பியவர்களை தேடும் பணிகள் தொடர்கின்றன.
Local
28 August 2026
குத்துச்சண்டை போட்டாலும் , தொழிற்சாலை பணிகளில் சோம்பேறிகளான சீன ரோபோக்கள்
Local
28 August 2026
நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் (89) உடல்நலக்குறைவு- கவலைக்கிடமான நிலை
Local
28 August 2026
அமெரிக்க மத்திய உளவுத்தலைவரின் ரஷ்ய பயணத்தின் இரகசியம் வெளியானது?
Local
28 August 2026
பெர்லின் மரதனில் இருந்து விலகிக்கொண்ட சாதனை வீரர்!
Local
28 August 2026