போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவராகவும் சந்தேகிக்கப்படும் 'கெஹல்பத்தர பத்மே' என்பவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கைப்பேசிகளிலிருந்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏழு நடிகைகள் மற்றும் ஒன்பது அரசியல்வாதிகள் குறித்த தகவல்கள் அவற்றில் இருந்து பெறப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.
முன்னதாக, சந்தேக நபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட எட்டு கைப்பேசிகளிலிருந்தும் நீக்கப்பட்ட தரவுகள் தொழில்நுட்ப உதவியுடன் மீட்கப்பட்டுள்ளன.
இதில் 8,841 தொலைபேசி அழைப்பு விபரங்கள், 3,26,000-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், 1,101 ஒலிக்குறிப்புக்கள் மற்றும் 5,039 காணொளிகள் என்பன அவற்றில் அடங்கியுள்ளன.
சந்தேக நபரின் தொலைபேசிகளில் ஒன்பது அரசியல்வாதிகள் மற்றும் ஏழு நடிகைகள், தொடர்பான புகைப்படங்கள் மற்றும் தொலைபேசி உரையாடல் பதிவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருப்பினும், பெயரிடப்பட்ட நபர்கள் எவரும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இதன் மூலம் அர்த்தப்படுத்த முடியாது என புலனாய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், 20 முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குறித்த தகவல்கள் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அத்துடன் 13 சிறைச்சாலை அதிகாரிகளின் தொலைபேசி எண்களும் கண்டு பிடிக்கப்பட்டு, அது குறித்து சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 19 பேரின் கடவுச்சீட்டுப் புகைப்படங்கள் மற்றும் 17 வங்கிக் கணக்குகள் குறித்தும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த 2021 மே மாதம் இலங்கையிலிருந்து சட்டபூர்வமாக வெளியேறிய கெஹல்பத்தர பத்மே, ஐக்கிய அரபு இராச்சியம், இந்தோனேசியா, ரஷ்யா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா மற்றும் லாவோஸ் உள்ளிட்ட 13 நாடுகளுக்கு சுமார் 15 முறை பயணம் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும், இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட அவர், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தார்
இந்தநிலையில், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் செப்டம்பர் 3ஆம் திகதி வரை அவரை, விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Latest News
பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ள புதிய பேரிடர் முகாமைத்துவ கட்டமைப்பு அவசியம்: சஜித் எச்சரிக்கை!
Local
26 August 2026
சர்வதேச நாய்கள் தினம் இன்று
Local
26 August 2026
இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டி: follow on பெற்றது இலங்கை அணி
Local
26 August 2026
பாகிஸ்தான் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து : 15 பச்சிளங்குழந்தைகள் உயிரிழப்பு
Local
26 August 2026
"கலாசாரம் ஆடையில் இல்லை, உணர்வில் உள்ளது.." - கங்கனாவின் விமர்சனத்துக்கு கிருத்தி சனோன் பதில்
Local
26 August 2026
தரம் குறைந்த உரம் இறக்குமதி ஊழல் வழக்கு: டிசம்பர் 4ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
Local
26 August 2026
கெஹல்பத்தர பத்மேவின் கைப்பேசிகள் மூலம் வெளிவந்த முக்கியத் தகவல்கள்: குற்றத்தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் அறிக்கை
Local
26 August 2026
காதலின் வெளிப்பாடா அல்லது சட்ட மீறலா? சிற்றூந்தில் 3,400 முத்தக் குறியீடுகளைப் பதித்த இளம் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!
Local
26 August 2026
டொக்சிக் படக்குழுவின் அதிரடி வேண்டுகோள்: இரசிகர்கள் செய்யக்கூடாதவை என்ன?
Local
26 August 2026
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெளியேறும் மற்றும் நுழைவுப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்
Local
26 August 2026