இந்தியாவில் ஏதிலிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள், எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது கைதுகளுக்கோ உள்ளாகாமல் நாட்டின் எந்தவொரு சர்வதேச வானூர்தி நிலையத்தினூடாகவும் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்குத் தேவையான சட்டரீதியான தளர்வுகள் செய்யப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோரும் இந்த சந்திப்பில் உடனிருந்தனர்.
யுத்த காலத்தில் முறைசாரா வழிகளில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் இலங்கையர்கள், பலாலி வானூர்தி நிலையம் ஊடாக நாடு திரும்பியபோது சில கைதுச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.
இதனையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலையீட்டால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய, உயிரைப் பாதுகாப்பதற்காக முறைசாரா வழிகளில் வெளியேறிய அனைவரும் இப்போது நாட்டின் எந்தவொரு சர்வதேச வானூர்தி நிலையம் ஊடாகவும் அச்சமின்றித் திரும்ப முடியும் என அமைச்சர் விளக்கமளித்தார்.
மேலும், இவ்வாறு நாடு திரும்புவோரை மீள்குடியேற்றம் செய்வதற்கும், அவசியமான காணிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களாகச் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஊடாகத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்கமைய கடந்த ஜனவரி முதல் 2026 ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் 65 ஏக்கரும், கிளிநொச்சியில் 128 ஏக்கரும், முல்லைத்தீவில் 615 ஏக்கரும், மன்னாரில் 135 ஏக்கருக்கும் அதிகமான காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

Latest News
கிரிக்கெட்டில் அரசியல் சர்ச்சை - பதிலளிக்கத் திணறிய பாகிஸ்தான் பயிற்றுவிப்பாளர்!
Local
29 August 2026
சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாட்டுக்கு தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் ஆதரவு!
Local
29 August 2026
எல் நினோ தாக்கத்தால் விவசாயத்துக்கு பாதிப்பு – குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படுமா?
Local
29 August 2026
34 வயதில் காலமானார் உலகின் மிக இளைய மன்னர் ஓயோ நியாம்பா: உகாண்டாவில் சோகம்!
Local
29 August 2026
இலங்கையும் இந்தியாவும் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல்!
Local
29 August 2026
லஹிரு குமாரவுக்கு அனுமதி - துனித் வெல்லாலகேவுக்கு மறுப்பு!
Local
29 August 2026
ஆசிய ரக்பி செவன்ஸ்: இலங்கையை வீழ்த்திய தென் கொரிய அணி !
Local
29 August 2026
முடிவுக்கு வரும் எதிர்பார்ப்பு: சென்னை அணியின் அடுத்த பயிற்றுவிப்பாளர் யார்? – ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி
Local
29 August 2026
உயிரியல் ரீதியாகத் தொடர்பில்லாத இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த அவுஸ்திரேலியப் பெண்!
Local
29 August 2026
ஐ.நா எழுப்பிய கவலைகளுக்கு இலங்கை பதில்!
Local
29 August 2026