யாழ்ப்பாணம் - செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் முறையான மற்றும் சுயாதீனமான விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கை அரசுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என அவுஸ்திரேலிய பசுமைக் கட்சியின் செனட்டர் டேவிட் ஷூபிரிட்ஜ் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின்போது இதனைக் குறிப்பிட்ட அவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் இந்த விவகாரத்தை தீவிரமாக எழுப்ப வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை நீதி மற்றும் பொறுப்புக்கூறலை அடைவதற்குத் தனது ஆதரவை வழங்கும் என்று அவுஸ்திரேலியா முன்னர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான சரியான நேரம் இதுவெனத் தெரிவித்த அவர், முழுமையான தளம் பாதுகாக்கப்படுவதையும், மனித எச்சங்கள் மற்றும் சாட்சியங்களுக்கான சுயாதீனமான தடயவியல் சங்கிலிப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதையும் அவுஸ்திரேலிய அரசு தூண்ட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
யாழ்ப்பாணம் செம்மணியில் இடம்பெற்ற மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் கடந்த 19ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில், அங்கு மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மொத்த எண்ணிக்கை 583 ஆக உயர்ந்துள்ளது.
எனினும், இவ்வளவு அதிகமான மனித எச்சங்கள் மீட்கப்பட்ட போதிலும் இலங்கை அரசாங்கம் இது குறித்து இதுவரை மௌனம் காத்தே வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கையில் சுமார் 20 புதைகுழி தளங்களை ஆவணப்படுத்தியுள்ள போதிலும், அவற்றில் எதற்கும் இதுவரை முழுமையான மற்றும் வெற்றிகரமான விசாரணைகள் நடத்தப்படவில்லை எனவும் செனட்டர் ஷூபிரிட்ஜ் கவலை வெளியிட்டுள்ளார்.
இதனிடையே, நம்பகமான மற்றும் முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தவறிழைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்டுள்ள தமிழ் ஏதிலிகள் பேரவை, உள்ளூர் பொறிமுறைகளில் தமிழ் சமூகம் எத்தகைய நம்பிக்கையையும் வைக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, உடனடியாகச் சுயாதீன விசாரணையொன்றை முன்னெடுப்பதோடு, சாட்சியங்களைப் பாதுகாத்து, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

Latest News
வடக்கு தொடருந்து மார்க்கத்தின் போக்குவரத்துச் சேவைகளில் பாதிப்பு
Local
28 August 2026
தமிழகத்தில் நலத்திட்டங்களை சொந்தப்பணத்தில் செய்யும் விஜய்?
Local
28 August 2026
உலகளாவிய குறைந்தபட்ச ஊதிய ஒப்பீட்டு அறிக்கையில், இலங்கைக்கு 120 ஆவது இடம்
Local
28 August 2026
இந்தியாவில் மோடியின் செல்வாக்கு குறையவில்லை : பிரதமர் போட்டிக்களத்தின் முதல் மூன்று பேரில் விஜய்யும் உள்ளடக்கம்
Local
28 August 2026
பெண்கள், குழந்தைகளின் அந்தரங்க படங்களை பகிர்ந்தவர் கைது !
Local
28 August 2026
முன்னாள் ஆண் கிரிக்கெட் வீரர், அவுஸ்திரேலிய பெண்களுக்கான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க அனுமதி!
Local
28 August 2026
இன்றும் எச்சரிக்கை நிலைக்கு செல்லும் வெப்பநிலை!
Local
28 August 2026
22 தொடர்பில் மீண்டும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
Local
28 August 2026
நேபாளம், திபெத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால், உயிர்த் தப்பியவர்களை தேடும் பணிகள் தொடர்கின்றன.
Local
28 August 2026
குத்துச்சண்டை போட்டாலும் , தொழிற்சாலை பணிகளில் சோம்பேறிகளான சீன ரோபோக்கள்
Local
28 August 2026