International27 August 2026

நேபாள திடீர் வெள்ளப்பெருக்கு : 157 பேர் உயிரிழப்பு, 400-க்கும் அதிகமானோர் மாயம்!

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் குறைந்தது 157 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், 341 வெளிநாட்டவர் உட்பட குறைந்தது 403 பேர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போனவர்களைத் தேடும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அனர்த்தம் காரணமாக வீடுகள், பாலங்கள் உள்ளிட்ட பல கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes