General27 August 2026

நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு : இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை – வெளிவிவகார அமைச்சு

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160-ஐ கடந்துள்ளது.

இதனிடையே, ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து காணாமல் போயுள்ளதாகவும், அவர்களைத் தேடும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதுவரை எந்தவொரு இலங்கையரும் காணாமல் போனதாகவோ அல்லது பாதிக்கப்பட்டதாகவோ தகவல் கிடைக்கவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேபாளத்தின் நிலைமை தொடர்பில் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes