Sports28 August 2026

ஈட்டி எறிதல் போட்டியில் உலகை வென்ற இலங்கை வீரர் !

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நடைபெற்ற 2026 டையமண்ட் லீக் தடகள தொடரில், இலங்கையின் முன்னணி வீரர் ருமேஷ் தரங்க ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றுள்ளார்.

ருமேஷ் தரங்க 92.07 மீற்றர் தூரம் எறிந்து தனது உலகத் தரத்திலான திறமையை மீண்டும் நிரூபித்துள்ளதோடு ஆண்டர்சன் பீட்டர்ஸ் (கிரெனடா) – 86.93 மீற்றர் தூரம் எறிந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

போலந்தைச் சேர்ந்த டாவிட் வேக்னர் 85.16 மீற்றர் தூரம் எறிந்து மூன்றாம் இடத்தைப் பெற்றார்.

போட்டியின் தொடக்கத்தில் இருந்தே கடும் போட்டி நிலவிய போதிலும், இரண்டாம் இடம் பிடித்த பீட்டர்ஸை விட 5.14 மீற்றர் கூடுதல் தூரம் எறிந்து ருமேஷ் தனது ஆதிக்கத்தை முழுமையாகச் செலுத்தினார்.
Related recommendation
Hiru TV News | Programmes