General27 August 2026

நேபாள வெள்ளப்பெருக்கு - ஜனாதிபதி அநுர இரங்கல்!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது 'X' சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி வெளியிட்டுள்ள அந்தப் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து இடம்பெற்ற சோகமான உயிரிழப்புகள் குறித்து அறிந்து நான் மிகுந்த கவலை அடைந்துள்ளேன்.

நேபாளத்தின் மீட்பு மற்றும் தேடுதல் பணிகளுக்கு உதவ இலங்கை தயாராகவுள்ளது.

பத்து மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட ஆபத்தான புயலில் இருந்து மீண்டு வரும் நாடாக, நேபாள மக்களின் துயரத்தை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்.

என்னுடன் இணைந்து இலங்கையும் நேபாள மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related recommendation
Hiru TV News | Programmes