General27 August 2026

அதிகரிக்கும் வெப்பம் - வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

சில பகுதிகளில் நாளை (28) பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் 'எச்சரிக்கை' நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த வெப்பமான காலநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சூரிய ஒளியில் நீண்ட நேரம் வெளியில் இருப்பது சோர்வு மற்றும் தசப்பிடிப்புக்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பொதுமக்கள் போதியளவு நீரைப் பருகுமாறும், வெளிப்புற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes