General29 August 2026

ரொட்டி, பரோட்டா உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ரொட்டி, பரோட்டா மற்றும் சிற்றுண்டி வகைகள் உள்ளிட்ட கோதுமை மா சார்ந்த உணவுப் பொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலை அதிகரிப்பின் தாக்கத்தை கருத்திற்கொண்டு இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று நள்ளிரவு முதல் குறித்த உணவுப் பொருட்களின் புதிய விலைகள் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes