இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்தை அண்மித்த கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளதாகக் கூறப்படும் ஈரானியக் கப்பல்கள் குறித்து அரசாங்கம் தீவிர அவதானம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.
இருப்பினும், குறித்த கப்பல்கள் இலங்கையின் எல்லைக்குட்பட்ட கடற்பரப்புக்கு (Territorial Waters) வெளியே நிறுத்தப்பட்டுள்ளதால், அவை தொடர்பில் இலங்கைக்கு எவ்விதப் பொறுப்பும் இல்லை என்றும், அந்தக் கப்பல்களுக்கு எவ்வித வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகை காரணமாக, தங்களின் சொந்த நாட்டுத் துறைமுகங்களுக்குத் திரும்ப முடியாமல் சுமார் 20 ஈரானிய எண்ணெய் தாங்கி கப்பல்கள் இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயதுக்கு அப்பால் (14 கடல்மைல் தொலைவில்)அருகில் நங்கூரமிட்டுள்ளதாகக் 'டேங்கர்ட்ரேக்கர்ஸ்' (TankerTrackers) இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது.
ஈரானியக் கொடியுடன் கூடிய சுமார் 13 எண்ணெய் தாங்கி கப்பல்கள் மற்றும் தடைகளிலிருந்து தப்பித்துச் செயல்படும் "நிழல் கடற்படை" என அழைக்கப்படும் பல கப்பல்கள் உட்பட சுமார் 20 ஈரானியக் கப்பல்கள் பாதுகாப்புத் தேடி இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்துக்கு அருகில் நங்கூரமிட்டுள்ளன.
இருப்பினும், இந்த எண்ணெய் தாங்கி கப்பல்களில் தற்போது எரிபொருட்கள் எதுவும் ஏற்றப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் இலங்கைக் கடலோரப் பகுதியிலிருந்து 19 கடல் மைல் தொலைவில் ஈரான் கடற்படைக்குச் சொந்தமான 'IRIS டெனா' என்ற போர்க்கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டதுடன், 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest News
வளைவு அல்ல, முழு வட்டம்: சீனாவின் உயரமான பாலத்தின் கீழ் தோன்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய அற்புத வானவில்!
Local
01 September 2026
இயக்குநராகும் ரவி மோகன் : இசையமைப்பாளராக களமிறங்கும் கெனிஷா!
Local
01 September 2026
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
Local
01 September 2026
செப்டம்பர் 12 பேரணிக்கு அஞ்சி தன்னை சிறையில் அடைக்கத் திட்டம்: நாமல் ராஜபக்ச பகிரங்க குற்றச்சாட்டு!
Local
01 September 2026
பிரிந்தாலும் தொடரும் நட்பு : முன்னாள் மனைவி குறித்து ஜி.வி. பிரகாஷ் நெகிழ்ச்சி!
Local
01 September 2026
என்னை நீக்கிவிட்டு வேறொருவரை நடிக்க வைத்தார்கள்: ஆரம்பகால அவமானம் குறித்து மனம் திறந்த சூரி!
Local
01 September 2026
மூதாட்டியின் பாசத்துக்குரிய அழைப்பை ஏற்று வீட்டுக்கு சென்ற முதலமைச்சர் விஜய் - விலைமதிப்பற்ற பரிசால் இன்ப அதிர்ச்சி!
Local
01 September 2026
அழிவின் விளிம்பில் அபூர்வ உயிரினங்கள்: இந்தோனேசியாவை உலுக்கும் காட்டுத்தீ!
Local
01 September 2026
74 வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா? - ஆச்சரியத்தில் மருத்துவ உலகை அதிர வைத்த சம்பவம்!
Local
01 September 2026
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு ஒருபோதும் மன்னிப்பு வழங்கப்படாது! - ஹர்ஷன நாணயக்கார
Local
01 September 2026