நாட்டின் பல பகுதிகளில் இன்று (30) பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சபரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்பதுடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், அத்துடன் திருகோணமலை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும்.
எனவே, இதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு காரணமாக, ஆகஸ்ட் 28ஆம் திகதி முதல் செப்டெம்பர் 7ஆம் திகதி வரை இலங்கைக்கு அண்மையில் உள்ள அட்சரேகைகளுக்கு நேரடியாக மேலாக சூரியன் உச்சம் கொடுத்து வருகிறது.
அதன்படி, இன்று (30) நண்பகல் 12.11 மணியளவில் மன்னார், பெரியமடு, புளியங்குளம், வெலிஓயா மற்றும் புல்மோட்டை ஆகிய பகுதிகளுக்கு நேரடியாக மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
Latest News
பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் மீண்டெழுந்த இலங்கை – சாதனை படைக்கும் சுங்கத் திணைக்கள வருமானம்
Local
03 September 2026
“யாரும் ஓடிவிடக்கூடாது” – தமிழக சட்டமன்றத்தில் வெடித்த வார்த்தை மோதல்!
Local
03 September 2026
ஒரு மாம்பழம் 11 இலட்சமா? யாழில் நடந்த சுவாரஸ்யமான ஏலம்!
Local
03 September 2026
சமிந்த குலரத்னவின் முறைப்பாடு - கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் நாடாளுமன்ற அதிகாரிகள் முன்னிலை
Local
03 September 2026
கெஹெல்பத்தர பத்மேவின் விளக்கமறியல் நீடிப்பு
Local
03 September 2026
இணையப் பாதுகாப்பில் காத்திருக்கும் பேராபத்து: சமூக ஊடகங்களால் பாதிக்கப்படும் சிறுவர்கள் – 21 நாடுகளின் அதிர்ச்சி அறிக்கை!
Local
03 September 2026
கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு: மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை நிராகரித்தது சென்னை மேல்நீதிமன்றம்!
Local
03 September 2026
உடற்தகுதி பரிசோதனை இல்லாமலேயே இங்கிலாந்து தொடருக்கு குசல் மெண்டிஸ் தேர்வு செய்யப்பட்டாரா?
Local
03 September 2026
"குற்றம் செய்தவருக்கே அதன் தீவிரம் தெரியும்": நாமல் ராஜபக்ஷ குறித்து அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ கருத்து!
Local
03 September 2026
ஹோர்முஸ் நீரிணைக்கு 'ட்ரம்ப் நீரிணை' என பெயர் மாற்ற ட்ரம்ப் பரிந்துரை!
Local
03 September 2026