வெளிமாவட்டங்களில் இருந்து கொழும்பு திரும்புவோருக்கு விசேட பேருந்து , தொடருந்து சேவைகள் ஆரம்பம்!
நீண்ட விடுமுறை முடிவடைந்துள்ள நிலையில், வெளிமாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தொடருந்து திணைக்களம் ஆகியவை இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகளை ஆரம்பித்துள்ளன.
மாத்தறை, காலி மற்றும் கண்டி உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளில் இருந்து கொழும்பிற்கு திரும்பும் பயணிகளின் தேவையை கருத்திற் கொண்டு மேலதிக பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கான விசேட ஏற்பாடுகள் குறித்து அனைத்து பிராந்திய அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் வாகனங்களை இயக்கும் பேருந்து சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் எச்சரித்துள்ளார்.
நீண்ட விடுமுறையின் தொடக்கத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில், கணிசமான எண்ணிக்கையிலான பேருந்து சாரதிகள் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது தெரியவந்ததை அடுத்து இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, பயணிகளின் வசதிக்காக அநுராதபுரத்தில் இருந்து மாத்தறை வரை இன்று விசேட தொடருந்து சேவையும் இயக்கப்படுவதாக தொடருந்து ஊடகப் பேச்சாளர் அசாங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.
Latest News
வாட்ஸ்அப் குழுவின் ஊடாக உலகளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட கோடிக்கணக்கான யுரோ பரிமாற்றம்: வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பெல்ஜியம்
Local
31 August 2026
நேபாளத்தில் தொடரும் பேரவலம்: நீர்மின்சார நிலையத்தின் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்!
Local
31 August 2026
இசையுலகின் 'டெமி கோட்ஸ்' இவர்கள்தான்: ஜி.வி.பிரகாஷ் புகழாரம்!
Local
31 August 2026
இங்கிலாந்து அணியிடம் மீண்டும் தோற்றுப்போன பாகிஸ்தான் அணி
Local
31 August 2026
தொழில் வாழ்க்கையில் புதிய மைல்கல்: வரலாறு படைத்த லியோனல் மெஸ்ஸி!
Local
31 August 2026
ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையப்போவதில்லை: வாக்கெடுப்பில் தீர்ப்பை வழங்கிய ஐஸ்லாந்து மக்கள்
Local
31 August 2026
செல்சியா அணியில் இணைந்தார் எமிலியானோ மார்டினேஸ்: 3 ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து!
Local
31 August 2026
நைஜரில் வெடித்த கிளர்ச்சி: நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக ராணுவத் தலைமை அறிவிப்பு!
Local
31 August 2026
பணவீக்கம் 89 சதவீதமாக உயர்வு: அமெரிக்க - இஸ்ரேல் போரால் அவதியுறும் ஈரானிய மக்கள்!
Local
31 August 2026
துருக்கியில் இஸ்தான்புல் நகரில் தொடங்கும் முதல் மாநாடு: முப்படை தளபதிகள் பங்கேற்பு!
Local
31 August 2026