பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் அமைதிக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் ஒலிப்பெருக்கி மற்றும் ஒலிபெருக்கிச் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஒலி மாசுபாடானது குழந்தைகள், மாணவர்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்குப் பெரும் சுகாதார மற்றும் மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் 38/2005 இலக்க கட்டளை மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் 261 ஆம் பிரிவின் கீழ், பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் ஒலிபெருக்கிப் பயன்பாடானது பொது தொல்லையாகக் கருதப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட மாட்டாது.
அனுமதிப்பத்திரம் பெறப்பட்டிருப்பினும், திங்கள் முதல் வியாழன் வரையிலான நாட்களில் இரவு 10 மணி வரையிலும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நள்ளிரவு ஒரு மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் நள்ளிரவு 12.30 வரையிலும் மட்டுமே ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும்.
எனினும், விசேட சட்டரீதியான அனுமதிகள் வழங்கப்பட்ட குறிப்பிட்ட மத அல்லது விசேட நிகழ்வுகளுக்கு இந்தக் கட்டுப்பாடுகளிலிருந்து விலக்களிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதி பெறப்பட்டிருந்தாலும் ஒலி குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும், மீறுபவர்களின் ஒலிபெருக்கிச் சாதனங்களைக் கைப்பற்றிச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத ஒலி மாசுபாடு தொடர்பில் 118 அல்லது 119 ஆகிய அவசர இலக்கங்களுக்குத் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

Latest News
பிரபல நடிகருக்கு H1N1 பன்றிக்காய்ச்சல் தொற்று உறுதி : அதிகாரபூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் கவலை!
Local
01 September 2026
ரொஷான் அமரசிங்க CID பணிப்பாளராக நியமனம்!
Local
01 September 2026
நகைப் பிரியர்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு : இன்றைய தங்க விலை நிலவரம் இதோ!
Local
01 September 2026
சுயசரிதை எழுதுகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்!
Local
01 September 2026
மேசை பந்து போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கை வீரர் தாவி சமரவீர
Local
01 September 2026
ஹோர்ட்டன் சமவெளிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!
Local
01 September 2026
இந்திய கிரிக்கட்டுக்குள் நுழையும் ஜூனியர் சுரேஸ் ரெய்னா
Local
01 September 2026
மருத்துவ அதிகாரிகளுக்கான இடைநிலைத் தரம்: பரிந்துரைக்காக அறுவர் கொண்ட குழு நியமனம்!
Local
01 September 2026
22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்!
Local
01 September 2026
பிரித்தானியா செல்லும் முதலமைச்சர் விஜய் : மனைவியை சந்திப்பதாக வெளியாகும் பரபரப்புத் தகவல்!
Local
01 September 2026