General31 August 2026

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது!

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணை அதிகாரிகளால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு இணங்க, முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க இன்று காலை சுமார் 8.15அளவில் ஆணைக்குழுவில் முன்னிலையானார்.

பல மணிநேர தீவிர விசாரணைக்குப் பின்னர் அதிகாரிகள் அவரைக் கைது செய்துள்ளனர்.

தேசிய லொத்தர் சபைக்கு அங்கீகரிக்கப்பட்ட பணியமர்த்தல் நடைமுறைகளுக்குப் புறம்பாக ஒப்பந்த அடிப்படையில் ஐவர் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டு, பின்னர் அவரின் தனிப்பட்ட பணியாளர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டமை தொடர்பிலான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes