முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமைக்கான காரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்களை கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வெளிப்படுத்தியுள்ளது.
நிதியமைச்சராகப் பதவியில் இருந்த காலப்பகுதியில், நிதி அமைச்சின் சிறப்புத் திட்டம் என்ற பெயரில் தேசிய லொத்தர் சபையின் ஊடாக முறையற்ற விதத்தில் மூன்று பேரை ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக்கொண்டு அரச நிதியை முறைகேடு செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் திகதி முதல் 2017 ஆம் ஆண்டு மே 22 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், அப்போதைய தேசிய லொத்தர் சபையின் தலைவி ஷமிலா பெரேராவுடன் இணைந்து, இரு ஒருங்கிணைப்பு அலுவலர்கள் மற்றும் ஒரு முகாமைத்துவ உதவியாளர் ஆகியோரை ரவி கருணாநாயக்க நியமித்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நபர்கள் தேசிய லொத்தர் சபைக்கு எத்தகைய சேவையையும் வழங்காத போதிலும், அதன் நிதியிலிருந்து அவர்களுக்குச் சம்பளமும் படிகளும் வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
திருத்தப்பட்ட 1994 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க கையூட்டல் அல்லது ஊழல் சம்மந்தமான ஆணைக்குழுச் சட்டத்தின் 70 ஆம் பிரிவின் கீழ் இந்தச் செயல் ஊழலாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News
இந்திய கிரிக்கட்டுக்குள் நுழையும் ஜூனியர் சுரேஸ் ரெய்னா
Local
01 September 2026
மருத்துவ அதிகாரிகளுக்கான இடைநிலைத் தரம்: பரிந்துரைக்காக அறுவர் கொண்ட குழு நியமனம்!
Local
01 September 2026
22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்!
Local
01 September 2026
பிரித்தானியா செல்லும் முதலமைச்சர் விஜய் : மனைவியை சந்திப்பதாக வெளியாகும் பரபரப்புத் தகவல்!
Local
01 September 2026
22வது திருத்தம் தொடர்பில் சாதனை அளவாக உயர் நீதிமன்றத்தில் 67 மனுக்கள் தாக்கல்!
Local
01 September 2026
கஞ்சா கலந்த மாவா போதைப்பொருளுடன் வவுனியாவில் ஒருவர் கைது !
Local
01 September 2026
மேட்டூர் அணை திறப்பு: காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் விஜய்
Local
01 September 2026
தமிழகத்திலுள்ள முக்கிய கோயில்களுக்கு கைபேசிகளை கொண்டு செல்ல இன்று முதல் தடை!
Local
01 September 2026
நாட்டின் பல பகுதிகளில் இன்று பகல் நேரத்தில் வெப்பக் குறியீடு அதிகரிப்பு: பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்கள்
Local
01 September 2026
22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான மனுக்கள் இன்று பரிசீலனைக்கு!
Local
01 September 2026