காயம் காரணமாக போட்டிகளில் இருந்து விலகியிருந்த இலங்கை ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 அணிகளின் தலைவர் குசல் மெண்டிஸ், உடற்தகுதி பரிசோதனையில் பங்கேற்காமலும் போட்டிகளில் விளையாடாமலும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான குழுவில் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இங்கிலாந்து சென்ற பின்னர் பயிற்சி போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் தனது உடற்தகுதியை நிரூபிப்பார் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக, காயமடைந்த வீரர் ஒருவரை தேசிய அணிக் குழுவில் இணைப்பதற்கு முன்னர், பல கட்ட உடற்தகுதி பரிசோதனைகளுக்கு உட்படுத்தி, அவர் போட்டிகளில் விளையாடுவதற்குத் தயாராக உள்ளார் என்பது உறுதி செய்யப்படுவது தேசிய தேர்வுக் குழுவின் நடைமுறையாகும்.
ஆனால், குழு தெரிவு செய்யப்பட்டபோதும் குசல் மெண்டிஸ் உடற்தகுதி பரிசோதனைகளில் பங்கேற்கவில்லை என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முதலாவது இருபதுக்கு 20 போட்டிக்கு முன்னதாக, இலங்கை அணி இங்கிலாந்தில் இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாடவுள்ளது.
அந்தப் பயிற்சி போட்டிகளுக்குப் பின்னர் குசல் மெண்டிஸின் உடற்தகுதி மதிப்பீடு செய்யப்படவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
Latest News
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக சஜீவனி தில்கா லக்மாலி பதவிப் பிரமாணம்
Local
03 September 2026
புளியங்கொட்டை தொண்டையில் சிக்கி 7 வயது சிறுமி உயிரிழப்பு – கலஹா பகுதியில் சோகம்
Local
03 September 2026
இளநீர் உற்பத்தியை அதிகரிக்க 250 புதிய கிராமங்கள்: மூன்று ஆண்டு தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்
Local
03 September 2026
அபுதாபியில் இருந்து நாடு கடத்தப்பட்ட இருவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்
Local
03 September 2026
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ஏ.ஜே.எம். முசம்மிலின் மூத்த மகன் விடுதலை
Local
03 September 2026
வாகன இறக்குமதி மூலம் சுங்கத்திணைக்களத்தின் வருமானம் அதிகரிப்பு
Local
03 September 2026
1.2 பில்லியன் டொலர் கடன் இருப்பதாக ‘Rich Dad Poor Dad’ ஆசிரியர் தகவல்! ரொபர்ட் கியோசாகி வெளியிட்ட அதிரடித் தகவல்!
Local
03 September 2026
சென்னையில் உலகத்தரம் வாய்ந்த ஒலிம்பிக் நகரம் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
Local
03 September 2026
சர்வஜன வாக்கெடுப்புக்கு அரசாங்கம் தயார் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
Local
03 September 2026
இலங்கையில் ஒரே நாளில் சடசடவென அதிகரித்த தங்க விலை!
Local
03 September 2026