International04 September 2026

அமெரிக்காவிடம் போதிய அளவு ஆயுதம் கையிருப்பு உள்ளது:அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதி

ஈரானுக்கு எதிரான போர் தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில் அமெரிக்க ராணுவத்தில் ஆயுதங்கள் அல்லது வெடிமருந்துகளுக்கு எந்தவித பஞ்சமும் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிடம் தங்கு தடையின்றி பயன்படுத்தக்கூடிய அளவுக்கு அதிநவீன ஆயுதங்களும் வெடிமருந்துகளும் பெருமளவில் கையிருப்பில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் ஆயுத உற்பத்தி இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளதாகவும் போருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் தடையின்றி வழங்கப்பட்டு வருவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ராணுவத்தின் ஆயுத கையிருப்பு குறைந்து வருவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தவறானவை மற்றும் உண்மைக்கு புறம்பானவை என்று கூறியுள்ள அவர் ஊடகங்கள் தவறான தகவல்களை பரப்புவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

ஈரானுடனான மோதல் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் அமெரிக்க ராணுவத்தின் பலம் மற்றும் ஆயுத வலிமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் ட்ரம்பின் இந்த பதில் அமைந்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes