மட்டக்களப்பு, வெல்லாவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பகுதியில், பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாலையடிவட்டை மருத்துவமனை வீதியைச் சேர்ந்த, 37ஆம் கிராமம் நவகிரி வித்தியாலயத்தில் 6ஆம் ஆண்டில் கல்வி கற்று வந்த ரொ. சஞ்சீவ் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிறுவனின் வீட்டிற்கு முன்னால் இருந்த நாவல் மரத்திலிருந்து நிலத்தில் விழுந்து கிடந்த நாவல் பழமொன்றை சிறுவன் எடுத்து உண்டுள்ளார்.
அதன் பின்னர் சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்த நிலையில், உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
எனினும், சிறுவன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நிலத்தில் கிடந்த நாவல் பழத்தில் பாம்பின் விஷம் பட்டிருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், அதனை உட்கொண்டதன் காரணமாக சிறுவன் உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் உடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Latest News
கபொத உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம் - ஆண்டின் இறுதிக்குள் பெறுபேறுகளை வெளியிடத் திட்டம்
Local
06 September 2026
அங்கீகரிக்கப்படாத போலி எடைக் குறைப்பு ஊசிகள் கள்ளச்சந்தையில் விற்பனை – மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!
Local
06 September 2026
அமெரிக்கப் படைகளுக்குப் பதிலடி - ஹோர்முஸ் நீரிணையில் 3 ஏவுகணைகளை ஏவி ஈரான் தாக்குதல்
Local
06 September 2026
பிற்பகல் 2 மணிக்கு பின் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழை : பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்!
Local
06 September 2026
ஊழல் நபர்களைப் பாதுகாக்க முயல்கிறது ஐக்கிய தேசியக் கட்சி: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கடும் விமர்சனம்!
Local
06 September 2026
தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறு: டெல்லி விமான நிலையத்தில் தொழிலதிபர் கைது!
Local
06 September 2026
டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில் செம்பியன் பட்டம் வென்று ருமேஷ் தரங்க வரலாற்று சாதனை!
Local
06 September 2026
மெஸ்ஸியின் 10ஆம் இலக்க சீருடைக்கு ஓய்வு இல்லை ஆர்ஜென்டீனா கால்பந்து சம்மேளனம் அதிரடி முடிவு!
Local
06 September 2026
தர்ப்பைப் புல்லால் இறுதிச் சடங்கு! வெள்ளத்தின் பின் பரிதவிக்கும் உறவினர்கள்!
Local
06 September 2026
அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை! ஹொர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் அதிரடித் தாக்குதல்!
Local
06 September 2026