General04 September 2026

மின்னல் தாக்கம் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் இன்று (04) கடுமையான மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

இன்று இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் இந்த எச்சரிக்கையின்படி, 10 மாவட்டங்களுக்குச் சிவப்பு எச்சரிக்கையும், 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.

ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கடுமையான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வலுவான காற்று வீசக்கூடும் என்றும் அது மேலும் குறிப்பிட்டுள்ளது.

மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் சேங்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களைத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes