General04 September 2026

வடக்கு, கிழக்கு மற்றும் பல மாவட்டங்களுக்கு வெப்பமான காலநிலை எச்சரிக்கை!

வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் சனிக்கிழமை (5) வளிமண்டலவியல் திணைக்களம் வெப்பமான காலநிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இன்று (4) மாலை 4 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கையானது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்குப் பொருந்தும் என தெரிவித்துள்ளது.

பகல் வேளையில் சில பகுதிகளில் வெப்பச் சுட்டெண் அல்லது மனித உடல் உணரப்படும் வெப்பநிலை "எச்சரிக்கை" (Caution) மட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்பமான காலநிலைக்கு எதிராகத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு குறிப்பிடப்பட்ட பகுதி மக்களிடம் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes