General05 September 2026

நாமலின் கைதை கண்டித்துள்ள ரணிலின் கட்சி

பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைதுக்கு ஐக்கிய தேசியக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் அரசியல்வாதிகள் மீதான மக்களின் ஏற்புத்தன்மையை இதுபோன்ற கைதுகள் தடுத்துவிட முடியாது என்றும் அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

செப்டம்பர் 12 அன்று அனுரதபுரத்தில் நடைபெறவிருக்கும் பொதுஜன பெரமுனவின் பேரணியை சீர்குலைக்கும் நோக்கிலேயே நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு பேரணிகளை நடத்த என்ன உரிமையுள்ளதோ, அதே உரிமை நாடாளுமன்ற உறுப்பினர் ராஜபக்சவுக்கும் உண்டு என்று அந்தக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

இதுபோன்ற நடவடிக்கைகளை எவரும்இ குறிப்பாக 'Gen Z' தலைமுறை இளைஞர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes