General07 September 2026

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள சில பகுதிகளில் நாளை (08) 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேலும், நாளை பிற்பகல் 2 மணிக்கு பின்னர் ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
Related recommendation
Hiru TV News | Programmes