அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் ஆசனப்பட்டி (Seat belt) அணிவது தொடர்பான கட்டாய ஒழுங்குமுறை எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் மிகக் கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் முன் இருக்கை பயணிகள் மட்டுமன்றி, பின் இருக்கைப் பயணிகளும் கட்டாயமாக ஆசனப்பட்டி அணிய வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களில் ஆசனப்பட்டிகளைப் பொருத்துவதற்கோ அல்லது பழுதுபார்ப்பதற்கோ பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்டு, இந்த ஒழுங்குமுறை அமுல்படுத்தப்படுவது ஒத்திவைக்கப்பட்டு வந்ததாக அவர் விளக்கமளித்தார்.
இருப்பினும், செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் இந்த விதிமுறை கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும், அந்தத் திகதிக்குப் பிறகு எந்தவொரு சாக்குப்போக்குகளுக்கு இடமோ அல்லது மேலதிக கால அவகாசமோ வழங்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
Latest News
உங்களுக்குப் பிடித்ததை மட்டுமே பார்க்கலாமா? : சமூக வலைத்தளங்களை உலுக்கும் புதிய சட்டம்!
பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இருதரப்புப் பேச்சுவார்த்தை - ஜனாதிபதியுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு
ஐநா பொதுச் சபைக் கூட்டம் - நியூயோர்க்கில் உரை நிகழ்த்த உள்ளார் வெளிவிவகார அமைச்சர்
இஸ்ரேல் – பிரித்தானியா இடையே அதிகரிக்கும் பதற்றம்: தூதரகத்தை மூட உத்தரவு – ஊழியர்களுக்கு எச்சரிக்கை!
Cognizant நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு அதிரடி தடை : வெளிநாட்டு ஊழியர்களின் 'க்ரீன் கார்ட்' கனவு உடைகிறதா?
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு - கல்வி முறையில் கடுமையான நெருக்கடி
இந்தியா - இலங்கை உறவை வலுப்படுத்தும் மூன்று ஒப்பந்தங்கள் - ஜனாதிபதியைச் சந்திக்கிறார் ராஜ்நாத் சிங்!
இலங்கையின் எல்லைக்கு அப்பால் ஈரானிய கப்பல்கள் : அமெரிக்க தூதரகம் வழங்கிய தகவல்!
அமெரிக்க ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட மன்னர் தொடர்பான தவறான காணொளி!
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரம்: இந்தியப் பிரஜையின் உடலம் விசேட பாதுகாப்புடன் அடக்கம்