அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் ஆசனப்பட்டி (Seat belt) அணிவது தொடர்பான கட்டாய ஒழுங்குமுறை எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் மிகக் கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் முன் இருக்கை பயணிகள் மட்டுமன்றி, பின் இருக்கைப் பயணிகளும் கட்டாயமாக ஆசனப்பட்டி அணிய வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களில் ஆசனப்பட்டிகளைப் பொருத்துவதற்கோ அல்லது பழுதுபார்ப்பதற்கோ பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்டு, இந்த ஒழுங்குமுறை அமுல்படுத்தப்படுவது ஒத்திவைக்கப்பட்டு வந்ததாக அவர் விளக்கமளித்தார்.
இருப்பினும், செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் இந்த விதிமுறை கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும், அந்தத் திகதிக்குப் பிறகு எந்தவொரு சாக்குப்போக்குகளுக்கு இடமோ அல்லது மேலதிக கால அவகாசமோ வழங்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
Latest News
அம்பிட்டியே சுமனரதன தேரருக்கு விளக்கமறியல்
லண்டனில் அஜித் பங்கேற்கும் சிற்றுந்து பந்தயத்தை நேரில் காண முதலமைச்சர் விஜய் திட்டம்?
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வந்தடைந்தார்!
தமிழக சட்டமன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு: சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்ட திமுக - பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட உறுப்பினர்கள்!
செப்.19 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்!
ஆபத்தில் திபெத் பீடபூமி : வேகமாக மறையும் பனிப்பாறைகள் - பேராபத்து காத்திருக்கிறதா?
"சினிமா பாணியில் உரை - மக்களின் எதிர்பார்ப்பு பொய்த்து விட்டது" : முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்த கிருஷ்ணசாமி!
சதொசவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகம்: சானக மதுகொட குற்றச்சாட்டு!
மஹிந்த தலைமையில் அனுராதபுர பேரணி: ஐக்கிய தேசியக் கட்சி வாழ்த்து!
அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை நாடளாவிய அடையாள பணிப்புறக்கணிப்பு