International09 September 2026

பிரித்தானியாவின் பிரதான வானூர்தி நிலையங்களில் தொழில்நுட்ப பிரச்சினையால் நூற்றுக்கணக்கான வானூர்தி சேவைகள் பாதிப்பு

பிரித்தானியாவின் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பான NATS நிறுவனத்தின் 'வானூர்தி பதிவு மையக் கணினியில்' (Flight processing system) ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக, நாட்டின் பல முக்கிய வானூர்தி நிலையங்களில் வானூர்தி சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

லண்டனின் ஹீத்ரோ (Heathrow), கெட்விக் (Gatwick), ஸ்டான்ஸ்டெட் (Stansted) மற்றும் மான்செஸ்டர் (Manchester) உட்படப் பல முக்கிய வானூர்தி நிலையங்களில் வானூர்திகள் தாமதமடைந்துள்ளன.

பல சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஹீத்ரோ வானூர்தி நிலையத்தில் சுமார் 100 வானூர்திகள் ரத்து செய்யப்பட்டதுடன் 360-க்கும் மேற்பட்ட வானூர்திகள் தாமதமாகின.

கெட்விக் வானூர்தி நிலையத்தில் சுமார் 31% வானூர்திகள் தாமதமடைந்துள்ளன.

இந்தத் தொழில்நுட்ப பிரச்சினையை சரிசெய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இயல்பு நிலைக்குத் திரும்பச் சிறிது நேரமாகும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வானூர்தி நிலையங்களுக்குப் புறப்படும் முன், தங்களின் வானூர்தி சேவை குறித்த தகவல்களைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு பயணிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes