இலங்கைக்கு அப்பால் சர்வதேச கடற்பரப்பில் பல ஈரானியக் கப்பல்கள் தரித்து நிற்பது தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை வெளியுறவு அமைச்சகத்திற்கு தகவல் வழங்கியுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பாதுகாப்பு மற்றும் துறைமுக அமைச்சகங்களுக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டதுடன், இலங்கை காவல்துறை மற்றும் கடற்படையினரால் குறித்த கப்பல்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கப்பல்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் இல்லை எனத் தெரிவித்த அமைச்சர், இலங்கையிலிருந்து 24 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள சர்வதேச கடற்பரப்பில் மொத்தம் 47 கப்பல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான இராணுவ மோதல்கள் தொடரும் நிலையில், அடையாளம் காணப்பட்டுள்ள இந்தக் கப்பல்களில் பல ஈரானியக் கொடியைத் தாங்கிய கப்பல்களும், ஏனைய வணிக மற்றும் சரக்குக் கப்பல்களும் உள்ளடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், குறித்த கப்பல்களிலிருந்து இலங்கை அரசாங்கத்திடம் எந்தவொரு வசதியோ அல்லது உதவியோ கோரப்படவில்லை என்றும், அவற்றுக்கு எந்தவிதமான வசதிகளும் வழங்கப்படவில்லை என்றும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதைத் தவிர, இலங்கை அரசாங்கம் அவற்றில் வேறு எந்த வகையிலும் தலையிடவில்லை என்றும், மேலதிக நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
Latest News
பொதுப் போக்குவரத்தை மக்களின் இலகுவான தேர்வாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் - பிரதமர்
Local
11 September 2026
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் – இலக்கு தவறியதால் இரு சிறார்கள் உயிரிழப்பு
Local
11 September 2026
'டிசி' திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக BMW X7 சொகுசு சிற்றுந்து பரிசு
Local
11 September 2026
வறட்சியான காலநிலை நிலவும் பகுதிகளில் ஒக்டோபர், நவம்பரில் மழைக்கு வாய்ப்பு
Local
11 September 2026
கோட்டாபய ராஜபக்ச நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருகை
Local
11 September 2026
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பு
Local
11 September 2026
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் - திட்டமிடப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையிலான மோதலே காரணம்
Local
11 September 2026
கொங்கோவில் தீவிபத்து: மாணவர்கள் உட்பட்ட பலர் பலி
Local
11 September 2026
யோஷித ராஜபக்ச வழக்கில், பொய் சாட்சியம் - மன்றின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது
Local
11 September 2026
குடிநீர்ப் போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்தவருக்கு 750,000 ரூபாய் அபராதம்
Local
11 September 2026