அரசாங்கப் பல்கலைக்கழகக் கல்வி முறையில் நிலவும் கடுமையான நெருக்கடிகளுக்குத் தீர்வு கோரி, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் இன்று (09) ஒரு நாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது.
விரிவுரையாளர்களுக்கான வெற்றிடங்கள் மற்றும் போதிய தகுதியுள்ள கல்விசார் பணியாளர்கள் இன்மை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த வாரமும் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சங்கத்தின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.
நிலவும் வளப் பற்றாக்குறை காரணமாக 2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களைப் பல்கலைக்கழகங்களில் உள்வாங்க முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்குவதை விட, தற்போதுள்ள 17 பல்கலைக்கழகங்களின் தரத்தைப் பேணிப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஆட்சேர்ப்புக்கான வாக்குறுதிகள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என அந்தச் சங்கத்தின் உதவிச் செயலாளர் அருண வன்னிநாயக்க தெரிவித்தார்.
விரிவுரையாளர்களின் வெளிநாட்டு இடப்பெயர்வு காரணமாகப் பணிச்சுமை அதிகரித்துள்ளதாகவும், அரசாங்கத்தின் முறையான தலையீடு இன்மையே இந்தத் தீவிர நடவடிக்கைக்குக் காரணம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Latest News
ரொபோக்களின் விநோத போராட்டம்: மனிதர்களுக்குப் பதிலாக களமிறங்கி கோரிக்கை விடுத்த இயந்திர மனிதர்கள்!
Local
11 September 2026
கனடாவின் புதிய சாதனை: நயகரா ஆற்றில் உருவாக்கப்பட்ட இயற்கை வாழ்விடங்கள்!
Local
11 September 2026
கிரிக்கெட் கழகங்களைத் தரம் மாற்றிய விவகாரம்: நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு விளையாட்டுத்துறை அமைச்சருக்கு உத்தரவு!
Local
11 September 2026
ஒரே நாளில் மோதிக்கொண்ட சர்தார் 2 மற்றும் மண்டாடி: வசூலில் சாதனை படைத்த விபரங்கள்!
Local
11 September 2026
நாட்டின் சில பகுதிகளில் அடுத்த 36 மணித்தியாலங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!
Local
11 September 2026
இணையத்தில் தீயாய் பரவும் செல்ஃபி: அஜித்குமாரின் பந்தயத்தை நேரில் காண்பாரா த்ரிஷா?
Local
11 September 2026
இந்தியாவில் மீட்கப்பட்ட ஒராங்குட்டான்கள்: இந்தோனேசியாவுடன் கூட்டு விசாரணை - வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்!
Local
11 September 2026
ஏஐ மாடல்களைப் பயன்படுத்தி உயிரியல் ஆயுதம் தயாரிக்க முயன்ற விஞ்ஞானிகளின் கணக்குகள் முடக்கம்!
Local
11 September 2026
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிலிருந்து எதிர்க்கட்சி விலகல்: ரஞ்சித் மத்தும பண்டார அறிவிப்பு
Local
11 September 2026
மாகாண சபைத் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு? - கொதித்தெழுந்த எதிர்க்கட்சி!
Local
11 September 2026