General09 September 2026

ஐநா பொதுச் சபைக் கூட்டம் - நியூயோர்க்கில் உரை நிகழ்த்த உள்ளார் வெளிவிவகார அமைச்சர்

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் உயர் மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் எதிர்வரும் 26 ஆம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது, எதிர்வரும் 28 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் அவர் உரை நிகழ்த்த உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பங்களிப்பு குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர் ,

கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுச் சபை அமர்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டின் அரச தலைவராகக் கலந்துகொண்டதாகவும், இந்த முறை வெளிவிவகார அமைச்சராகத் தான் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes