Apple நிறுவனம் தனது அதிநவீன ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மெக்ஸ் (iPhone 18 Pro & Pro Max) கைபேசிகளை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
கெமரா, செயல்திறன், மின்கல ஆயுள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) வசதிகளில் பல முக்கிய மாற்றங்களுடன் இந்த புதிய கைபேசிகள் வெளியிடப்பட்டுள்ளன.
புதிய ப்ரோ மாதிரிகளில் 2-நனோமீற்றர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட எப்பளின் 'ஏ20 ப்ரோ' (A20 Pro) சிப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதன் 7-கோர் ஜிபியு (GPU) ஆனது முந்தைய ஏ19 ப்ரோ சிப்பை விட 40 சதவீதம் வரை வேகமான செயல்திறனை வழங்கும் என Apple நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய மாதிரிகளில் கெமரா பிரிவில் மிகப்பெரிய மாற்றமாக, ஐபோனில் முதல்முறையாக 'மாறிவரும் துளை' (Variable Aperture) தொழில்நுட்பத்துடன் கூடிய 48 மெகாபிக்சல் பியூஷன் முதன்மைக் கெமரா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஒளியமைப்பு மற்றும் ஆழத்துக்கு ஏற்ப இந்த கெமரா தானாகவே துளை அளவை மாற்றிக்கொள்ளும் வசதியைக் கொண்டுள்ளது. மேலும், படங்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக 'எப்பள் ரெஃபரன்ஸ் இமேஜ்' (Apple Reference Image) என்ற புதிய பாதுகாப்பு அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது.
இதன் புதிய சிறிய அளவிலான டைனமிக் ஐலண்ட் (Dynamic Island) ஒரே நேரத்தில் மூன்று நேரடி செயற்பாடுகளை (Live Activities) காட்டும் திறன் கொண்டது.
ஐஓஎஸ் 27 (iOS 27) இயங்குதளத்தில் இயங்கும் இதில், பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைப் புரிந்து கொண்டு செயல்படும் புதிய 'சிறி ஏஐ' (Siri AI) வசதியும் இடம்பெற்றுள்ளது.
மின்கல (Battery) வசதியைப் பொறுத்தவரை, ஐபோன் 18 ப்ரோ 36 மணி நேரமும், ப்ரோ மெக்ஸ் 45 மணி நேரமும் காணொளி பிளேபேக் வழங்கும். மேலும், வயர் மூலம் வெறும் 15 நிமிடங்களில் 50 சதவீதம் வரை மின்னேற்றம் செய்துகொள்ள முடியும்.
கருப்பு, வெள்ளி, கிளேசியர் மற்றும் புதிய பர்கண்டி ஆகிய நிறங்களில் வெளிவந்துள்ள இவற்றின் ஆரம்ப விலை அமெரிக்காவில் 1,199 டொலர்களில் தொடங்குகிறது. செப்டம்பர் 12ஆம் திகதி முதல் முன்பதிவு செய்யப்படவுள்ள இந்த கைபேசிகள், செப்டம்பர் 18ஆம் திகதி முதல் விற்பனைக்கு வரவுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest News
மக்கள் மீது அதிகாரம் செலுத்தும் அரசியல் யுகம் முடிந்துவிட்டது!- ஜனாதிபதி
Local
13 September 2026
சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல் களம் - மாபெரும் பலத்தைக் காட்ட ஒன்றுதிரளும் சஜித் அணி!
Local
13 September 2026
வானூர்தி கடத்தலை சாதுரியமாக முறியடித்த இலங்கையின் முதல் பெண் இராஜதந்திரி மானெல் அபேசேகர மறைவு!
Local
13 September 2026
வெளிப்புற எதிரியை விட நாட்டுக்குள் இருக்கும் எதிரியே மிகவும் ஆபத்தானவன் - மகிந்த ராஜபக்ஷ
Local
13 September 2026
24 வயதில் உயிரிழந்த பிரபல முஃபாங் இன்ஃப்ளூயன்சர் – இறுதிப் பதிவு ஏற்படுத்திய அதிர்ச்சி!
Local
13 September 2026
பொன்சேகா வழக்கு சந்தேகநபர் மீதான பிணை உத்தரவை எதிர்த்து சட்டமா அதிபர் மேன்முறையீடு!
Local
13 September 2026
சிறுவயதுத் தோழி தான் சொந்தச் சகோதரியா? : 15 வருடங்களுக்குப் பின் வெளிவந்த உண்மை - சினிமா கதையை மிஞ்சிய உண்மையான நெகிழ்ச்சி சம்பவம்!
Local
13 September 2026
முதல் இருபதுக்கு 20: சூர்யவன்ஷிக்கு வாய்ப்பளிக்க வேண்டும்; சஞ்சு சாம்சனுக்கு ஓய்வளித்தாலும் எந்தத் தவறும் இல்லை!
Local
13 September 2026
வாகன இலக்கத் தகடுகளை விரைவாக விநியோகிக்க புதிய நடவடிக்கை - மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம்
Local
13 September 2026
பிரதமர் மோடியின் சர்வதேச ராஜதந்திரத்திற்கு ரவி சாஸ்திரி புகழாரம்: 'பாரத் மண்டப' புகைப்படத்துடன் பெருமிதம்!
Local
13 September 2026