Apple நிறுவனம் தனது வரலாற்றில் முதன்முறையாக 'ஐபோன் டுயோ' (iPhone Duo) எனும் புதிய மடிக்கும் கைபேசியை அதிகாரப்பூர்வமாக Apple நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
கலிபோர்னியாவின் குப்பெர்டினோவில் உள்ள ஸ்டீவ் ஜோப்ஸ் அரங்கில் நடைபெற்ற Apple event நிகழ்வில் புதிய பிரதம நிறைவேற்று ஜோன் டெர்னஸ் (John Ternus) தலைமையில் இந்த கைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த புதிய மடிக்கும் கைபேசியின் வெளிப்புறத் திரை 5.4 அங்குலமாகவும், விரித்தவுடன் ஐபோன் வரலாற்றிலேயே மிகப்பெரியதான 7.6 அங்குலத் திரையைக் கொண்டதாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இதில் ஐபேட் (iPad) சாதனத்தில் பயன்படுத்தப்படும் எப்பள் பென்சில் (Apple Pencil) ஸ்டைலஸைப் பயன்படுத்தும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
போட்டியாளர்களின் மடிக்கும் கைபேசிகள் இரண்டு கைபேசிகள் ஒன்றாக இணைக்கப்பட்டதைப் போல இருப்பதாகக் குறிப்பிட்ட ஜோன் டெர்னஸ், தனது நிறுவனத்தின் 'டுயோ' கைபேசியானது மிகவும் உறுதியானதுடன், மடிப்புப் பகுதியில் குறைந்த அளவிலான சுருக்கத்தையே கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதன் ஆரம்ப விலை 1,999 அமெரிக்க டொலர்களில் தொடங்குகிறது. இதன் முன்பதிவுகள் எதிர்வரும் அக்டோபர் 16ஆம் திகதி தொடங்கி, அக்டோபர் 23 ஆம் திகதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது.
இதேவேளை, இந்த நிகழ்வில் மேம்படுத்தப்பட்ட ஏ20 (A20) சிப் மற்றும் அதிக மின்கல ஆயுளுடன் கூடிய ஐபோன் 18 ப்ரோ தொடர் கைபேசிகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.
இதன் ப்ரோ வகைகளின் விலை 100 டொலரால் அதிகரிக்கப்பட்டு, ஐபோன் 18 ப்ரோ 1,199 டொலருக்கும், ப்ரோ மெக்ஸ் 1,299 டொலருக்கும் விற்கப்படவுள்ளன.
எதிர்வரும் 12 முதல் முன்பதிவு செய்யப்படும் இவற்றுடன், சத்தம் குறைக்கும் வசதிகொண்ட ஏர்போட்ஸ் 5 (AirPods 5) சாதனங்களும் செப்டம்பர் 18 ஆம் திகதி முதல் விற்பனைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News
ஊழல்வாதிகளை பாதுகாக்கும் "பிற்போக்கு சிந்தனை” கொண்ட சிறிய குழுவே எஞ்சியுள்ளது- ஜனாதிபதி
Local
13 September 2026
டெஸ்ட் கிரிக்கெட்: ஸ்டீவ் ஸ்மித்தின் சாதனையை முறியடித்து ஜோ ரூட் முதலிடம்!
Local
13 September 2026
வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டம் சவாலாக இருக்கும்: ஆப்கானிஸ்தான் தலைவர் இப்ராஹிம் சத்ரான் கூற்று!
Local
13 September 2026
மக்கள் மீது அதிகாரம் செலுத்தும் அரசியல் யுகம் முடிந்துவிட்டது!- ஜனாதிபதி
Local
13 September 2026
சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல் களம் - மாபெரும் பலத்தைக் காட்ட ஒன்றுதிரளும் சஜித் அணி!
Local
13 September 2026
வானூர்தி கடத்தலை சாதுரியமாக முறியடித்த இலங்கையின் முதல் பெண் இராஜதந்திரி மானெல் அபேசேகர மறைவு!
Local
13 September 2026
வெளிப்புற எதிரியை விட நாட்டுக்குள் இருக்கும் எதிரியே மிகவும் ஆபத்தானவன் - மகிந்த ராஜபக்ஷ
Local
13 September 2026
24 வயதில் உயிரிழந்த பிரபல முஃபாங் இன்ஃப்ளூயன்சர் – இறுதிப் பதிவு ஏற்படுத்திய அதிர்ச்சி!
Local
13 September 2026
பொன்சேகா வழக்கு சந்தேகநபர் மீதான பிணை உத்தரவை எதிர்த்து சட்டமா அதிபர் மேன்முறையீடு!
Local
13 September 2026
சிறுவயதுத் தோழி தான் சொந்தச் சகோதரியா? : 15 வருடங்களுக்குப் பின் வெளிவந்த உண்மை - சினிமா கதையை மிஞ்சிய உண்மையான நெகிழ்ச்சி சம்பவம்!
Local
13 September 2026