General10 September 2026

ஷிரான் பாசிக்கின் நண்பருக்கு சொந்தமான ரூ.100 மில்லியன் பெறுமதியான இரு வீடுகள் 14 நாட்களுக்கு முடக்கம்

தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபரான ஷிரான் பாசிக்கின் நெருங்கிய கூட்டாளி எனக் கூறப்படும் நளின் அர்ஜுனவுக்கு சொந்தமானதாகக் குறிப்பிடப்படும் இரண்டு வீடுகள், 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளதாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடவத்தை மற்றும் களனி பகுதிகளில் அமைந்துள்ள குறித்த இரண்டு வீடுகளும் சுமார் 100 மில்லியன் ரூபாய் பெறுமதியானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes