General10 September 2026

பாகிஸ்தானிலிருந்து போதைப்பொருள் கடத்தல் : விசாரணைகளில் குளறுபடியா? - காவல்துறை சிறப்பு விசாரணை ஆரம்பம்!

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட இரண்டு கொள்கலன்களில் மறைத்து சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் போதைப்பொருள் தொகை தொடர்பான விசாரணைகளில் சில குறைபாடுகள் மற்றும் தாமதங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, குறித்த விசாரணை முறையாகவும் பாரபட்சமற்ற வகையிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதா என்பதை ஆராய்வதற்காக, காவல்துறை மாஅதிபரின் ஆலோசனைக்கு அமைவாக காவல்துறை சிறப்பு விசாரணைப் பிரிவினால் விசேட உள்நாட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, போதைப்பொருள் தொடர்பாக பிரதான விசாரணை, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes