General10 September 2026

இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.

இதன்போது, அண்மையில் இலங்கையை பாதித்த டிட்வா சூறாவளியின் போது , மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இந்திய இராணுவம் விரைந்து செயற்பட்டமைக்கு செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, அனர்த்தத்தால் சேதமடைந்த பாலங்களை புனரமைத்தல், பாதைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளில் இந்திய இராணுவம் விரைவாகவும் சிறப்பாகவும் செயற்பட்டமைக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உறவுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes