கடந்த அரசாங்கங்களைப் போல் அல்லாமல், இந்த அரசாங்கம் ஊழலை ஒழிக்கும் மற்றும் புதிய மாற்றங்களைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கையில் தமிழ் மக்கள் வாக்களித்தனர்.
ஆனால், இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இராணுவம் வசமுள்ள நிலங்களை விடுவித்தல், மாகாண சபைத் தேர்தலை நடத்துதல் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல் போன்ற வாக்குறுதிகள் வெறுமனே எத்துப்பொய்யாகவே உள்ளன.
காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி சாதகமாகப் பேசினாலும், நடைமுறையில் திணைக்களங்கள் தொடர்ந்து தமிழ் மக்களின் காணிகளைக் கையகப்படுத்தி எல்லைக் கற்களை நட்டு வருகின்றன.
இன்றைய சூழலில் ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னெடுக்கப்படும் கைது நடவடிக்கைகளை மட்டுமே காட்டி, தமிழ் மக்களின் நில உரிமை மற்றும் காணாமல் போனோர் விவகாரம் போன்ற அடிப்படைப் பிரச்சினைகளை அரசாங்கம் திசைதிருப்பி வருகிறது.
தென்னிலங்கை மக்களின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் புறக்கணிக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டினார்.
விழுதுகள் நிகழ்ச்சியின் முழு காணொளியை காண சூரியனின் யூடியூப் தளத்தை பார்வையிடவும்....
Latest News
லண்டன் வாழ் தமிழர்களை சந்திக்கிறார் தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்
Local
12 September 2026
18 ஆண்டு உலக சாதனையை சமன் செய்தார் பாகிஸ்தானின் அறிமுக வீரர் ரசாவுல்லா!
Local
12 September 2026
அரசாங்கத்தின் மீதான மக்களின் எதிர்பார்ப்புகளும் ஆதரவும் தற்போது குறையத் தொடங்கியுள்ளது: செல்வம் அடைக்கலநாதன்
Local
12 September 2026
வான்கடே மைதானத்தின் சிறப்பு வரவேற்பறைகளுக்கு சூட்டப்படவுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள்: மும்பை கிரிக்கெட் சங்கம் தீர்மானம்!
Local
12 September 2026
தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் திசைதிருப்பும் தற்போதைய அரசு: செல்வம் அடைக்கலநாதன் குற்றச்சாட்டு
Local
12 September 2026
அஜித் - விஜய் சந்திப்பால் அனைத்து நுழைவுச்சீட்டுகளும் விற்றுத் தீர்ந்தன
Local
12 September 2026
சாலமன் பாப்பையாவின் பூதவுடலுக்கு முழு அரச மரியாதையுடன் இறுதிக் கிரியை
Local
12 September 2026
கொழும்பு இசை நிகழ்ச்சி சர்ச்சை: நியோ தரப்பில் குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு
Local
12 September 2026
பட்டாசு வெடித்து 13 வயது சிறுவன் பலி! ஆலய உற்சவத்தில் நடந்த கொடூரம்
Local
12 September 2026
62 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் நாளை மறுதினம் முதல் டெங்கு கட்டுப்பாட்டு வாரம்
Local
12 September 2026