General12 September 2026

நாடாளுமன்றம் மற்றும் அரச பணிகளில் தமிழர்கள் புறக்கணிப்பு: செல்வம் அடைக்கலநாதன் குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தின் உள்ளகப் பணிகள் மற்றும் அரச துறை வேலைவாய்ப்புகளில் தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாடாளுமன்ற அமர்வு மண்டபத்தினுள் பணியாற்றுகின்ற ஊழியர்களில் பெரும்பாலானோர் சிங்கள மொழியை மட்டுமே தெரிந்தவர்களாகக் காணப்படுகின்றனர்.

அங்கு தமிழ் அறிந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. இதனால் தமிழ் மொழியில் தொடர்புகளை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்கள் நிலவுவதோடு, நாடாளுமன்றப் பணிகளில் தமிழர்களின் பிரதிநிதித்துவமும் கேள்விக் குறியாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், சிங்கள வாக்குகளை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் அரசாங்கம் திட்டமிட்டு இத்தகைய வேலைவாய்ப்புகளைச் சிங்கள மக்களுக்கு மட்டுமே வழங்கி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

விழுதுகள் நிகழ்ச்சியின் முழு காணொளியை காண சூரியனின் யூடியூப் தளத்தை பார்வையிடவும்.

Related recommendation
Hiru TV News | Programmes