அமெரிக்க அவசரகால மேலாண்மை முகமையின் (FEMA) பணியாளர்களின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்க உத்தரவிட்டதன் மூலம் ட்ரம்ப் நிர்வாகம் சட்டத்தை மீறியுள்ளதாகச் சான் பிரான்சிஸ்கோ மாவட்ட நீதிபதி சுசான் இல்ஸ்டன் தீர்ப்பளித்துள்ளார்.
FEMA அமைப்பிற்கு அதன் பணியாளர்கள் மீதான அதிகாரத்தைப் பறித்ததன் மூலமும், ஆயிரக்கணக்கான பேரிடர் நிவாரணப் பணிகளைக் குறைப்பதற்கு முகமையை வழிநடத்தியதன் மூலமும் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) சட்டவிரோதமாகச் செயல்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2005 ஆம் ஆண்டு கத்ரீனா சூறாவளிக்குப் பிறகு கொண்டுவரப்பட்ட கூட்டாட்சி சட்டத்தின்படி, FEMA இன் அதிகாரங்களையோ அல்லது பேரிடர் நிவாரணப் பணிகளையோ கணிசமாகக் குறைக்க DHS அதிகாரம் இல்லை என நீதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.
பேரிடர் நிவாரணப் பணிகளைச் சீர்குலைக்கும் இந்த பணிநீக்கங்களை எதிர்த்து அரசு ஊழியர்களின் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பணியாளர்கள் குறைப்பு குறித்து உரையாடத் தங்கள் தனிப்பட்ட கைபேசிகளில் Signal செயலியைப் பயன்படுத்தி, அந்தச் செய்திகளை அழித்ததற்காக FEMA மற்றும் DHS அதிகாரிகளை நீதிபதி கண்டித்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் மற்றும் தண்டனைகள் குறித்த விரிவான உத்தரவு அடுத்த மாதம் பிறப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆராச்சி, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை
Local
16 September 2026
நேரலையில் கோர விபத்து : அமெரிக்காவில் செய்தி நிறுவன உலங்கு வானூர்தி விழுந்து நொறுங்கி 3 பேர் உயிரிழப்பு!
Local
16 September 2026
நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் ஷிராந்தி ராஜபக்ச சிங்கப்பூர் பயணம்
Local
16 September 2026
எல் நினோ தாக்கம் : அடுத்த 2 மாதங்களில் இலங்கைக்கு காத்திருக்கும் மிகப்பெரிய காலநிலை மாற்றம்!
Local
16 September 2026
மீண்டும் டெங்கு தலைதூக்கலாம் -விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Local
16 September 2026
மெக்காவை இலக்கு வைத்து ஏவப்பட்ட ஆளில்லா வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டது : சவூதி கூட்டுப்படை விளக்கம்!
Local
16 September 2026
களுத்துறையில் தொடருந்து மோதி இரு பெண்கள் உயிரிழப்பு!
Local
16 September 2026
வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு : இறுதி கெடு அறிவிப்பு - தவறினால் அபராதம் மற்றும் வட்டி!
Local
16 September 2026
ஜப்பானில் 100 வயதைக் கடந்த முதியவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்து சாதனை!
Local
16 September 2026
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள்!
Local
16 September 2026