General13 September 2026

இலங்கைக்கு வருகை தந்த IMF குழு: நிதியமைச்சுடன் பேச்சுவார்த்தை ஆரம்பம்!

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள், நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கியின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையின் கடன் வேலைத்திட்டத்தின் ஏழாவது மீளாய்வு குறித்த கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்காகவே சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனம், மின்சாரத் துறை ஒழுங்குமுறை அதிகாரசபைகள் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகளுடனும் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தக் கலந்துரையாடல்கள் வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி வரை தொடர அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes