செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகளின் அபிவிருத்தி வேகத்தைக் குறைத்து, அவைகளைத் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும் என முன்னணி AI நிறுவனமான Anthropic-இன் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடை (Dario Amodei) தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
AI அபிவிருத்தியை நிறுத்துவது தொடர்பில் எந்தக் கேள்வியும் இல்லை என அவர் எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், அது தொடர்பான அபாயங்கள் பாரதூரமானவை என்பதால், அவற்றுக்கு தீர்வு காண்பதற்கு நிறுவனங்களுக்கும் அரசாங்கங்களுக்கும் போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக மூன்று முக்கிய கருத்துகளைக் கொண்ட திட்டத்தையும் அவர் முன்வைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
AI மாதிரிகளை அபிவிருத்தி செய்யும் போதே சுயாதீன கண்காணிப்பை மேற்கொள்வது, ஒட்டுமொத்த AI துறைக்கும் பொருந்தக்கூடிய ஒழுங்குமுறை முறைமையை அறிமுகப்படுத்துவது மற்றும் உலகளாவிய ரீதியில் ஒழுங்குமுறைகளை நடைமுறைப்படுத்துவது ஆகிய மூன்று யோசனைகளும் இதில் அடங்கும்.
இதற்கிடையில், AI தொழில்நுட்பத்தினால் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து அண்மைக்காலமாக பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் மிகக் கடுமையான அபாயங்கள் குறித்து வெளியிடப்பட்ட சில கருத்துக்களில், எதிர்வரும் பத்தாண்டு காலத்திற்குள் AI தொழில்நுட்பத்தினால் மனிதகுலம் முற்றாக அழிவதற்கான வாய்ப்பு 10 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Latest News
இங்கிலாந்து எதிர் இலங்கை: முதல் 20 க்கு 20 போட்டி : நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பில் ஈடுபட முடிவு!
Local
15 September 2026
காவல்துறை சான்றிதழ் இணையத்தள சேவை தற்காலிகமாக முடக்கம்: மாற்று வழி அறிவிப்பு!
Local
15 September 2026
சவூதியில் வாழும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை: ஜித்தா தூதரகம் வெளியிட்ட அதிரடி தகவல்!
Local
15 September 2026
மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் முன்னாள் தலைவருக்கு பிணை
Local
15 September 2026
உணவுப் பட்டியலிலிருந்து மறையும் மாட்டிறைச்சி: மேற்கு வங்காளத்தில் பரபரப்பு செய்தி!
Local
15 September 2026
ஒரே வருடத்தில் திருமணம் கைக்கூடும்: 'புனித மருதாணி' பெறக் குவிந்த மக்கள்!
Local
15 September 2026
காவல்துறை தகவலாளரின் மரணத்தைத் திட்டமிட்டதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மூவர் கைது
Local
15 September 2026
போக்குவரத்து சமிக்ஞையை மீறி ஆபத்தான முறையில் பேருந்தை செலுத்திய சாரதி மீது சட்ட நடவடிக்கை
Local
15 September 2026
IMAX வசூலில் வரலாறு படைத்த ‘The Odyssey’ திரைப்படம்!
Local
15 September 2026
முன்விரோதத்தால் வந்த வினை - கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் உயிரிழப்பு
Local
15 September 2026